மக்களை அச்சுறுத்திய தேன் கூடு அகற்றப்பட்டது

பாண்டார் பாரு செந்தூல் அடுக்கக வீடமைப்பு பகுதியின் அருகில் அமைந்துள்ள உயரமான மரத்தில் தேன் கூடு கட்டியிருந்தது.

அந்த மரம் கிட்டத்தட்ட நான்கு மாடி அளவிற்கு உயரமானது. இது அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக சிறு பிள்ளைகள் அதிகம் நடமாடும் இடமாக அது அமைகிறது என்று அங்குள்ள குடியிருப்பாளர் ஆர்.மகாதேவன் (வயது 50) என்பவர் தெரிவித்தார்.

உடனடியாக தீயணைப்பு இலாகாவினருக்கு தகவல் கொடுத்தோம். செந்தூல் மற்றும் ஹங் துவா தீயணைப்பு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மரம் மிக உயரம் என்பதால் கிரேய்ன் மூலம் அந்த தேன் கூட்டை தீ வைத்து அகற்றினர் என்று அவர் கூறினார்.

மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த இந்த தேன் கூட்டை உடனடியாக அகற்றிய தீயணைப்பு இலாகாவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அங்குள்ள குடியிருப்பாளர் எ.குணாளன் (வயது 40) கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here