உங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவு கிடைத்தால், தயவுசெய்து செல்லுங்கள் என்கிறார் கைரி

கோலாலம்பூர், அக்டோபர் 30 :

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகளின் சமீபத்திய அதிகரிப்பு காரணமாக, கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதன் விளைவாக, கோவிட் -19 பரவுவதை குறைக்க முடிந்தது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஒரு சமூக ஊடக பதிவினூடாக தெரிவித்தார்.

இருப்பினும், சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க, நாம் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

“அதனால்தான் எங்கள் பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

“உங்களுக்கு பூஸ்டர் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தால், அதற்குச் செல்லுங்கள்,” என்று அவர் இன்று கூறினார்.

கோவிட்-19 இன் தொற்று விகிதம் அக்டோபர் 22 முதல் அதிகரித்து வருகிறது. R-naught (Rt) இப்போது 0.95 ஆக உள்ளது.

அதிக ஆபத்துள்ள, நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழுவினர்களுக்கு முன்னுரிமை அளித்து, கோவிட்-19 தடுப்பூசி பூஸ்டர் திட்டம் இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here