கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள் கணக்கெடுப்பு

இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்துகிறது.

அந்த வகையில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018-ன் 4-வது சுற்று முடிவுகளை கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக அப்போது அவர் அறிவித்தார். இது உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். இந்த நிலையில் இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக உலக சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here