இதன் ஒரு பகுதியாக சீன் ஆற்றின் நடுவில் மிதக்கும் தியேட்டர் ஒன்று வரும் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு சுர் எல் யோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் தண்ணீரில் சினிமா என்பதாகும். மிதக்கும் தியேட்டரில் திரைப்படத்தை காண்பதற்காக 38 மின்சார படகுகள் தயாராக உள்ளன. கூடல் இடைவெளி நடைமுறை பின்பற்றி ஒவ்வொரு படகிலும் இரண்டு முதல் 6 பேர்வரை அமர்ந்து திரைப்படத்தை ரசிக்கலாம்.
கொரோனா தொற்று பற்றிய கொரோனா ஸ்டோரி என்ற குறும்படம் இராண்டாவது படமாக நீச்சல் அணியைத் தொடங்கும் ஆண்கள் குழுவைக் பற்றிய 2018ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான லு, கிராண்ட் பெயின் என்ற படமும் திரையிடப்படுகிறது. உள்ளுர்வாசிகளுக்கு இன்று திங்கட்கிழமை 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை டிக்கெட் வழங்கப்படுகிறது. பிரான்சில் கொரோன தொற்று அச்சம் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் 50 சதவீத அளவிற்கு மட்டுமே தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.