நெகிரி செம்பிலான் மக்கள் கணக்கெடுப்பு – 1.16 மில்லியன் குடியிருப்பாளர்களுடன் ஆய்வு

நாட்டின் 2020 ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மொத்த மக்கள் எண்ணிக்கையை கண்டறிய 1.16 மில்லியன் குடியிருப்பாளர்களை சந்தித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என இங்கு விஸ்மா நெகிரியில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மாநில அரசு செயலாளர் டத்தோ டாக்டர் ரசாலி அப்துல் மாலேக் கூறினார்.

கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கி இவ்வாண்டு செம்டம்பர் 30ம் வரையில் இம்மாநிலத்திலுள்ள 387 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளில் இதற்கான கணக்கெடுப்பு முதல் கட்ட பதிவு நடைப்பெறும்.

மின்னியல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழி இதற்கான பதிவு கேள்விகள் இணைக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்படும். முன்னதாக நெகிரி செம்பிலான் புள்ளிவிவரங்கள் துறை இலாகா முன்கூட்டியே இப்பதிவுக்கான போஸ்காட் ஒன்றை அனுப்பிவுள்ளது.

முதல் கட்டமாக 69 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இப்போஸ்காட்டில் அடையாள எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை கொண்டு இ-சென்சஸ் எனும் மின்னியல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துக்கொள்ளலாம்.

இப்பதிவில் பெயர், வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களை மறவாமல் குறிப்பிட வேண்டும். இதற்கான இரண்டம் கட்ட பதிவு நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் 7 தொடங்கி 24 தேதி வரை நடத்தப்படும்.

1960 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அணைத்து விபரங்களும் ரகசியமானது, அவ்விபரங்களை வெளியிட அனுமதி கிடையாது என்றும் ரசாலி தெரிவித்தார்.

எனவே இப்பதிவு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், இக்கணக்கெடுப்பு வேலைக்கு சுமார் 3,930 வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here