அவதூறாகப் பேசியவர்கள் ராஜினாமா செய்யவேண்டும்

நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தின்போது சில சட்டமன்ற உறுப்பினர்களின் மோசமான நடத்தைக்காக தேசிய தேசபக்தர் சங்கம் அவர்களைச் சாடியிருக்கிறது.

அதன் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் டத்தோ முகமட் அரஷாத் ராஜி,  நாடாளுமன்ற நடத்தைகளால் சங்கம் வெறுப்படைந்ததாகவும், அவர்கள் யாங் பெர்ஹோர்மாட் (மாண்புக்குரியவர்கள்) என்று அழைக்கப்படுவதற்குத்  தகுதியற்றவர்கள் என்றும் கூறினார்.

இதே போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் முரட்டுத்தனத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆனால், தங்கள் வாக்காளர்களுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக தொடர்ந்து வாக்களிக்கப்படுகிறார்கள்.

அவர்களின் நடத்தை நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, கற்ற , புத்திசாலித்தனத்துடன் பிரதிபலிக்காதபோது அவர்களை எவ்வாறு யாங் பெர்ஹோர்மாட் என்று அழைக்க முடியும்?

ஒவ்வொரு தனிப்பட்ட வேட்பாளரின் தகுதிகளையும் குறைபாடுகளையும் கருத்தில் கொண்டு மலேசியர்கள், குறிப்பாக முதல் முறையாக வாக்காளர்கள் விரும்பத்தகாத வேட்பாளர்களை எம்.பி.க்களாக தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது என்று  முகமட் அர்ஷாத் கூறினார்.

மலேசியர்கள் ஒரு முற்போக்கான, அறிவார்ந்த, நல்ல நடத்தை கொண்ட உறுப்பினர்களுக்குத் தகுதியானவர்கள்.  முரட்டுத்தனத்தை ஏற்படுத்தியவர்களைப்  போன்றவர்கள் அல்லர் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற பெண் உறுப்பினரை நிறம் பற்றிக்கூறி  அவமதித்திருக்கின்றனர்.

இன்னும் வெறுக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு காலத்தில் 22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த 95 வயதான எதிர்க்கட்சி உறுப்பினரைக் கேலி செய்வது நாகரகமற்றவர்களாக இருக்கின்றனர். அவரை அவமதித்தவர்கள்  அரசியலுக்குப் புதியவர்கள்.

அவர்கள் நல்ல பழக்கவழக்கங்களையும் நல்ல நடத்தைகளையும் கற்றுக்கொள்ள முடியாவிட்டால், ராஜினாமா செய்ய வேண்டும், அரசியலை விட்டு வெளியேற வேண்டும், பொது பணத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும்  என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here