இதுவரை நாம் பப்பாளி, அன்னாசிப் பழம், கேரட் போன்றவற்றில் அல்வா செய்திருக்கலாம். ஆப்பிள் பழத்தைக் கொண்டும் அல்வா செய்யலாம். குடும்பத்தோடு அமர்ந்து சுவைப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். வாருங்கள், ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஆப்பிள் – 2
சர்க்கரை – 4 ஸ்பூன்
நெய் – 5 ஸ்பூன்
கோதுமை மாவு – 1கப்
ரவா மாவு-அரை கப்
முந்திரிப் பருப்பு – 10
கேசரி பவுடர் – 1/2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு- நீங்கள் விரும்பும் அளவுக்கு(மேல் தூவலுக்கு)
ஜயண்ட், என்.எஸ்.கே பேரங்காடிகளில் விற்பனை செய்யப்படும் லேபிள் ஒட்டப்பட்ட உயர்தர ஆஸ்திரேலிய ஆப்பிள்களை வாங்கிக் கொள்ளுங்கள். அவை சுவையை அதிகரிப்பதாக இருக்கும்.
- ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.
- ரவா மாவை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்து வாணலியில், நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்து வேறு ஒரு வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து நன்கு கிளறுங்கள்.
- வெந்ததும் கேசரி கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும். பாதாம் பருப்பை சற்றே தூவி விடுங்கள்.
- அல்வா பதம் வந்ததும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறினால் ருசியான ஆப்பிள் அல்வா தயார்.