லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடல்

இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் பலனாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வரும் சூழ்நிலையில், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளா.
இன்று காலை லடாக் வந்து சேர்ந்தார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவும் வருகை தந்துள்ளனர்.
முதல் நாளான இன்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் நாளை ஆய்வு செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here