மனைவியைத் தாக்கியவருக்குத் தண்டனை

சிலாங்கூர் ராவாங்கில் உள்ள பண்டார் கண்ட்றி ஹோம்ஸ் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியை த்தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஒரு கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சுமார் 26 வயதான்ன  அந்நபர் மதியம் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டு உள்நாட்டு வன்முறைச் சட்டத்தின் 18 ஏ பிரிவின் கீழ்  தடுத்து  வைக்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

ஏழு மாத கர்ப்பிணி பெண்மணி தமது கணவரால், வயிற்றிலும் முழங்காலிலும் தாக்கபட்டதாக புகாரில் தெரியவந்ததாகக் கூறினார்.

சுமார் 29 வயதான பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகார் அளிப்பதற்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இப்போது நிலையான நிலையில் உள்ளார் என்று அவர் நேற்று  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஒரு தனி வழக்கில், கோம்பாக்கிலுள்ள தாமான் சமுத்ராவில்,  மாலை 30 வயது நபர் ஒருவர் தனது மனைவியை அடித்து மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார்.

உணவு சப்ளையராகப் பணிபுரியும் சந்தேக நபர், தனது மனைவியை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக  அடையாளப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இரவு 7 மணியளவில், 30 வயதான பாதிக்கப்பட்டவர், தனது கணவர் வன்முறையில் ஈடுபட்ட பின்னர் போலீசாரிடம் புகார்  செய்தார். மேலும் , தம்து கைப்பேசியையும் எடுத்துச் சென்றதாக அவர் புகாரில் தெரிவித்தார்.

இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 ,  உள்நாட்டு வன்முறைச் சட்டத்தின் பிரிவு 18 ஏ ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here