புதிதாக மூவருக்குத் தொற்று

நாட்டில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்துவந்த கோவொட் -19 தொற்று இரட்டை எண்ணுக்கு உயர்ந்திருக்கிறது. பிரிக்ஃபீல்ட்ஸ், சரவாக் ஆகிய இடங்களில் மூன்று  தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன என்று சுகாதரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா  தெரிவித்தார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள் குறித்து, டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்ததில் இன்று நண்பகல் வரை 250 பேர் – 14 தொழிலாளர்கள், 236 வாடிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டதில் இரண்டு இந்திய பிரஜைகள் நேர்மறை யாகக் கண்டறியப்பட்டனர் என்றார் அவர்.

மூன்றாவது நபர் சரவாக்கில் உள்ள கூச்சிங் ஜெட்டியில்க் கண்டறியப்பட்டார்.  மொத்தம் 25 மீனவர்கள் சோதிக்கப்பட்டதில் , இரண்டு இந்தோனேசிய பிரஜைகள் நேர்மறையாக இருந்தனர் என்று அவர் கூறினார். இவர்களுக்கு ஏற்பட்ட   தொற்றுநோய்களுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here