போதையில் செலுத்திய காரால் மற்ற கார்கள் சேதம்

இங்குள்ள ஜாலான் பாண்டாய் செனாங்கில் நிகழந்த  சம்பவத்தில் மது போதையில்  இருந்த ஒருவர் பல கார்களை மோதித்தள்ளியிருக்கிறார். இதற்குக்காரணமான் ஒர் நபரை போது கைது செய்யப்பட்டார் என்று போலீசார் கூறினர்.

காலை 8.20 மணியளவில், 35 வயதான ஊனமுற்ற அந்நபர்  ஓட்டிவந்த கார்,  கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை மோதியதாகக் கூறப்படுகிறது.

ஜாலான் பாண்டாய் செனாங்கின்  புறத்திலிருந்து வந்த அந்நபர் மளிகைக் கடைக்குச் செல்ல லங்காபுரி விடுதியின் வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழந்தது. வாகன நிறுத்துமிடத்தில் யு-டர்ன் செய்யும் போது, ​​சந்தேக நபர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது பக்கத்தில் இருந்த கார்களை மோதியிருக்கிறார்.

பரிசோதனையில், அவர் மது போதையில் வாகனம் ஓட்டியிருப்பது நிரூபிக்கப்பட்டது, அந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here