கோவிட்-19 வைரஸ் தொற்றினை முறியடிக்க முன்னெடுக்கும் நடவடிக்கையாக மட்டுமல்லாது மக்களின் வாழ்வாதாரத்தை நல்ல பாதைக்குக் கொண்டு ஙெ்ல்லவும் பொருளாதாரத்தை மீட்சியுறச் ஙெ்ய்யவும் மலேசியர்கள் அனைவரும் பரிவு மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
2020ஆம் ஆண்டு சீதந்திர மாதத் தொடக்க விழா மற்றும் தேசியக்கொடியைப் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் தமதுரையில் இவ்வாறு கூறினார்.
பரிவு மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மக்களிடையே ஒற்றுமை, சீபிட்ங்ம் ஆகியவற்றை வலுப்படுத்த முடியும். இந்த மனப்பான்மையை ஒன்றிணைந்து கடைப்பிடித்தால்தான் நல்ல பலன் கிட்டும்.
இவ்வாண்டு சீதந்திர தினம், மலேசிய தினம் ஆகியவற்றின் கருப்பொருள் பரிவுமிக்க மலேசியா என்பதாகும். நடப்பு அரசாங்கம், முன்னிலைப் பணியாளர்கள், தனியார் தரப்பினர், தன்னார்வலர்கள், அரசு சாரா இயக்கங்கள், தனிநபர் போன்ற கோவிட்-19 வைரஸ் தொற்றினை எதிர்கொள்ள ஒத்துழைப்பு நல்கும் அனைத்துத் தரப்பினரையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. அதோடு பொருளாதாரம், மக்கள் நலன் என பல்வேறு அமசங்களில் கவனம் செலுத்தும் அரசாங்கத்திடமும் இந்தப் பரிவு மனப்பான்மை வெளிப்படுகிறது.
இக்கட்டான சூழ்நிலையில் அரசியல் கருத்து வேறுபாடு, இனம், மதம் என்று பாராமல் மலேசியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். இந்நாட்டில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாக நாட்டுப் பற்று விளங்குகின்றது.
குறிப்பாக சுதந்திர மாதத்தில் நாட்டுப்பற்று அனைவரின் எண்ணத்திலும் மேலோங்கி இருக்க வேண்டும். அனைவரும் தேசியக் கொடியைப் பறக்க விட்டு மரியாதை செலுத்துவோம் என்றும் பிரதமர் தமதுரையில் விவரித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுத் தாக்கத்தினால் இந்த நிகழ்ச்சி விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மத்தியில் மட்டுமே நடைபெற்றது.
நிகழ்வில் ஓர் அங்கமாக சுதந்திர தின சிறப்பு தகவல் வாகன பயண தொடக்க விழாவும் நடைபெற்றது. பிரதமர் கொடி அசைத்து அவ்விழாவை தொடக்கி வைத்தார்.
இவ்வாண்டு சுதந்திர தினம், மலேசிய தினம் ஆகியவற்றின் செயற்குழுத் தலைவரும் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சருமான டத்தோ சைஃபுடின் அப்துல்லா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி ஜிடின், மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களோடு ராணுவப்படைத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அபெண்டி வோங், தேசிய போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர், சுகாதாரத்துறைத் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங், குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஸைனி, மலேசிய கடற்படை அமலாக்க இலாகா தலைமை அதிகாரி டத்தோ முகமட் ஜுபில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் ஆகியோரும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் முன்னிலைப் பணியாளர்களைக் கெளரவப்படுத்தும் வகையில் பலதரப்பட்ட முன்னிலைப் பணியாளர்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் ராணுவப்படையின் லெப்டினன்ட் ராகவன் முருகேசன் பிரதமரிடம் தேசியக் கொடியைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.