அகத்தியரின் முருகன் மந்திரம்

அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார்.

சித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது நாம் அறிந்ததே. அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் நமது சொல்லும் செயலும் தெளிவாக இருக்க அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் பற்றி பார்க்கலாம்.

அகத்தியரின் முருகன் மந்திரம்

ஓம் முருகா,

குரு முருகா,
அருள் முருகா,
ஆனந்த முருகா,
சிவசக்தி பாலகனே,
ஷண்முகனே,
சடாக்ஷ்ரனே,
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க,
ஓம் ஐம் ஹ்ரீம்,
வேல் காக்க சுவஹா!

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு அறிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here