நீதிமன்றம் செல்ல தயார் : ஹனிசா முகமது

ஈப்போ: பி.கே.ஆர் கோரியபடி  10 மில்லியன் (1 கோடி வெள்ளி)  இழப்பீடு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹனிசா முகமது தல்ஹா   தயாராக உள்ளார். தனது முன்னாள் கட்சியிடமிருந்து கோரிக்கைக் கடிதத்தை இன்னும் பெறவில்லை என்றும், தனக்கும் மற்ற 19 முன்னாள் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிராக கோரிக்கையை எடுக்க முடியாது என்று என்கிறார் ஹனிசா. இன்றைய நிலவரப்படி, கடிதத்தை யார் பெற்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நான்  கட்சியிலிருந்து விலகவில்லை. நான் பதவி நீக்கம் செய்யப்பட்டேன். நான் ஒரு சுயேச்சையாக  இருப்பதால் நான் கவலைப்படவில்லை, எந்த அரசியல் கட்சிகளுடனும் இல்லை என்று அவர் மேலும் கூறினார். பி.கே.ஆர் பொருளாளர்  லீ சீன் சுங் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும்  10 மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து  10 மில்லியன் தொகையை  கோருவதற்கான கோரிக்கை கடிதங்களை கட்சி வெளியிடுவதாக கூறியதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதம் கட்சியின் வனிதா தலைவராக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹனிசா, இந்த  கோரிக்கை மத்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறினார். அரசியலமைப்பில், எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அமைப்பிலும் சேர எந்தவொரு நபருக்கும் இது உரிமை அளிக்கிறது. நான் பி.கே.ஆரைத் தவிர்த்து ஒரு கட்சியில் சேர்ந்தாலும்  நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here