ஜோர்தானில் உள்ள மாணவர்களுக்கு தங்குமிட வசதி; ஜோகூர் மாநில அரசு ஆலோசனை

பத்து பகாட்:

ஜோர்தானில் படிப்பைத் தொடரும் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க ஜோகூர் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழுத் தலைவர் முகமட் ஃபேர்ட் முகமட் காலிட் அண்மையில் ஜோர்தானுக்கு விஜயம் செய்திருந்தபோது, ஜோர்தானிலுள்ள ஜோகூரிய மாணவர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எகிப்தில் 8.4 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களை மாநில அரசு முன்பு வாடகைக்கு எடுத்து, அதில் 354 மாணவர்களுக்கான விடுதிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அவர் நினைவு கூறினார்.

எகிப்து மற்றும் ஜோர்தானில் உள்ள ஜோகூரியன் மாணவர்களுக்கு அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், படிப்பில் சிறந்து விளங்கவும் மாநில அரசு முறையே RM88,500 மற்றும் RM65,500 நிதி உதவி வழங்கியதாகவும் முகமட் ஃபேர்ட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here