கோவிட் 19 – முன்னணி பணியாளர்களுக்கு நன்றி

இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் உதயமான எம்பிஎம்ஆர் எனப்படும் மை பைக் மை ரூல்ஸ் மோட்டார்ஸ்போர்ட் குழு கோவிட் 19 முன்னணி பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தது.

கோலாலம்பூரிலிருந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் போர்ட்டிக்சனை நோக்கி அணிவகுப்பினை மேற்கொண்டனர். இந்த குழுவின் சார்பில் முன்னணி பணியாளர்களுக்கு பாராட்டு, நன்றி தெரிவிக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

கோவிட் 19 நோய் தொற்றால் நமது நாட்டில் பல பேர் பாதிக்கப்பட்டனர். மக்களுக்கு இத்தொற்று ஏற்படாமல் இருக்க போலீஸ், ராணுவம், மருத்துர்கள், தாதியர்கள், உணவுகளை விநியோகம் செய்தவர்கள் என பல தரப்பினர் அல்லும் பகலும் அயராது உழைத்தனர். அவர்களின் தியாக உணர்வுகளுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் இந்த மோட்டார் சைக்கிள் அணிவகுப்பினை ஏற்பாடு செய்ததாக அக்குழுவின் தோற்றுநர் சிவராமன் சந்திரன் கூறினார்.

இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நல்ல நோக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இந்த குழு தோற்றுவிக்கப்பட்டது. இன்றைய இளைஞர்கள் மோட்டார்ஸ்போர்ட் துறையில் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதை காட்டிலும் மோட்டார்ஸ்போர்ட் குழுவில் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடலாம் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

எங்களின் முதல் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு கோலாலம்பூரில் நடைபெற்றது. தலைநகரில் அமைந்துள்ள நாட்டின் சரித்திரப்பூர்வ இடங்களை சுற்றிப் பார்த்தோம். அதோடு கடந்த ஜூலை 26ஆம் தேதி போர்ட்டிக்சனுக்குச் சென்றோம் என்று சிவராமன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here