திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியானது. அவர்களில் 402 பேர் குணமடைந்து விட்டனர். 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 16 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here