நவீன ‘ஸ்டெச்சர்’

அபுதாபி போலீஸ் விமான போக்குவரத்து பிரிவின் துணை இயக்குனர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி கூறியதாவது:-

அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அபுதாபியில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக ஏர் ஆம்புலன்சு எனப்படும் சிறப்பு ஹெலிகாப்டரில் சிகிச்சைக்காக அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுவரை கவச உடைகளை அணிந்தபடி மருத்துவ ஊழியர்கள் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்று வந்தனர். இதில் அவர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரிலும், ஊழியர்களுக்கும் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கேப்சூல் படுக்கைகள் போன்ற நவீன ‘ஸ்டெச்சர்’ அபுதாபியின் போலீஸ் துறையின் மீட்புபணி ஹெலிகாப்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடி பெட்டி போன்ற அமைப்பில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் அல்லது நோயாளி உள்ளே படுக்க வைக்கப்படுவார். அந்த பெட்டியின் உள்ளே ஆக்சிஜன் செலுத்த வசதி உள்ளது.

மேலும் பல்வேறு திறப்புகள் போன்ற அமைப்புகளில் இருந்து வெளியில் இருந்தபடியே நோயாளியை தொடாமல் பரிசோதனை மற்றும் உயிர்காக்கும் கருவிகளை பொருத்த முடியும். அதற்காக மூடி போன்ற அமைப்பில் கையுறைகள் நோயாளியை தொடும் வகையில் உள்ளது.

இதன் மூலம் கொரோனா நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுள்ள நபர்களை எந்த வித தயக்கமும் இல்லாமல் ஹெலிகாப்டரில் தகுந்த மருத்துவ பாதுகாப்புடன் அழைத்து செல்ல முடியும். இந்த நவீன கேப்சூல் படுக்கை ‘ஸ்டெச்சர்’ அமைப்புடன் உள்ளதால் நோயாளியை ஆம்புலன்சில் இருந்து அப்படியே சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்ல முடியும். இதன் மூலம் கிருமி தொற்று வெளியில் பரவாமல் தடுப்பதுடன் துரிதமாக பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையும் அளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here