கொரோனாவுடன் போராடும் தென்கொரியாவின் புது முயற்சி

கோடை வெப்பம், பருவமழை மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம் தென் கொரிய தலைநகர் சியோலில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்பேருந்து நிறுத்தத்திலுள்ள கண்ணாடி சுவர் பலகைகள் காற்றை சுத்தம்செய்வதற்கும், குளிர்விப்பதற்குமான புறஊதா ஒளி ஸ்டெர்லைசர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் திரைகள் பேருந்து நெருங்கும்போது பயணிகளை எச்சரிக்கிறது. கைகளை சுத்தம்செய்யும் சானிடைசர், இலவச வைஃபை, லேப்டாப் அல்லது மொபைல் சார்ஜர் வசதிகள் இங்குள்ளது.

இங்குள்ள கதவுகளில் பொருத்தப்பட்டுள்ள வெப்பத்தை அளவிடும் கேமரா 37.5 டிகிரி செல்சியஸ் (99.5 டிகிரி பாரன்ஹீட்) க்கும் குறைவான உடல் வெப்பநிலை உள்ளவர்களை மட்டுமே பேருந்து நிறுத்தத்திற்குள் நுழைய அனுமதிக்கிறது. குழந்தைகளுக்கு குறைந்த உயரத்தில் தனி கேமராவும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுத்தத்தின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு அதன்மூலமாக மின்சாரம் பெறப்படுகிறது.

தென் கொரியாவின் கிழக்கு சியோலில் சியோங்டாங் மாவட்டத்தில் இதுபோன்ற பத்து பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இந்த பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒரு பேருந்து நிறுத்தத்தின் மதிப்பு 84,000 டாலர் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here