சிவகார்த்திகேயனும் டோனி மாதிரி தான்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். டோனிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், “எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி டோனி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான தலைவன் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாள்வீர்கள். உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவை குறிப்பிட்டு இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: “சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை நீங்களும் பலரை மகிழ்வித்து வழிகாட்டியாக இருந்து உள்ளீர்கள். நீங்களும் டோனி மாதிரி நண்பர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here