2 விழுக்காடு தீயணைப்பு வீரர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பு!

மலாக்கா, பிப்ரவரி 8 :

நாடு முழுவதும் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மொத்த 15,000 ஊழியர்களில் சுமார் 2 சதவீதம் பேர் இன்னும் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மறுப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட் ஹம்தான் வாஹிட் இதுபற்றிக் கூறுகையில், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முடித்த உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் (95%) ஒப்பிடும்போது, 50 பேருக்கும் குறைவாகவே இந்த 2 விழுக்காடு இருந்தது என்றார்.

சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கூறும் காரணங்களில், மதம் தொடர்பானது மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கத்தால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் சிலரைத் தவிர, தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால்

கோவிட் -19 தடுப்பூசி செலுத்தாவிட்டால், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை மற்றும் தகவல்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் தமது துறையினர் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

“இத்தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு ஆலோசனை, தகவல் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் தடுப்பூசி செலுத்தவிட்டால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி எடுத்துரைக்கிறோம் “.

“ஏனென்றால், அவர்கள் ஒரு குழுவாக வேலை செய்கிறார்கள், அவர் ஆறு பேர் கொண்ட இயந்திரத்தில் செல்கிறார், இத் தடுப்பூசியை காரணம் காட்டி அவரை அந்நியப்படுத்த முடியாது”.

“உதாரணமாக இந்த மண்டபத்திற்குள் நுழைவதானால், தனிநபரின் MySejahtera நிர்ணயிக்கப்பட்ட நிறத்தை தவிர வேறு நிறத்தில் இருந்தால், அவர் மண்டபத்திற்குள் நுழைய முடியாது. இது தடுப்பூசி எதிர்ப்பு உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு,” என்று இன்று Bukit Katil – மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மலாக்கா தலைமையகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் தொடர்பான ஆலோசனையின் பின்னர் சில உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.“இன்னும் சிலர் இன்னும் ஆலோசனை பெற்று வருகின்றனர் என்றார்.

“முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கவுன்சிலிங்கிற்குப் பிறகு, ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்குமாறு நாங்கள் அவரிடம் கேட்கலாம், அவற்றை நாங்கள் பரிசீலிப்போம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here