தொழிலதிபரை மணக்கும் காஜல்?

2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது திருமண வதந்திகள் வந்துள்ளன. இதற்கு அவர் பல முறை மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று கூறிய காஜல் அகர்வால், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவில் தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர் தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here