தளபதி 65 படம் பற்றிய மாஸ் அப்டேட்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் ‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here