போகி : இதையெல்லாம் செய்யக்கூடாது..

தமிழர் திருநாள் என்றால் பொங்கல் திருநாளை முதன்மைப்படுத்தி கூறுவோம். அந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் திருநாள் பெரும் பங்கு வகிக்கிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்துதான் இத்திருநாள் தொடங்குகிறது. போகி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்று கேட்டால், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்று குறிப்பிடுவோம். அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை ஒதுக்கி  இனி வரும் நாட்களை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால், உண்மையில் போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதை உணர்த்தும் வகையில்தான் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருகிறோம். தீய எண்ணங்களை எரிப்பதற்கு இது சமமாகும் என்று நம்பப்படுகிறது.

ஆம், தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திர பகவானுக்காகதான் பாரம்பரியமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அல்லது புது வண்ணம் பூசி கொண்டாடுவார்கள். இவற்றுடன் பழைய ஆடைகள் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்படுதி விடுவார்கள்.

இந்த நன்நாளில், தங்களில் வீட்டின் முற்றத்தில் மக்கள் பாரம்பரிய முறையில் கோலங்களை அரிசி மாவு பயன்படுத்தி போடுவது வழக்கம். அடுத்தாக, விவசாயிகள் தங்கள் உபகரணங்களை வணங்குவார்கள். மேலும் இந்திரனை வணங்கி இந்த வருடம் நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வணங்கி மகிழ்வார்கள்.

ஆங்கில ஆண்டின் ஜனவரி 13ஆம் தேதியில் போகியை கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் அது இந்த வருடம் 14ஆம் தேதி வருகிறது. போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர பகவான் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார்.

சுக போக வாழ்க்கையை பெறுவதற்கு சுக்கிர பகவானின் அருள் நமக்கு தேவை. சுக்கிரன் பார்வை வலுவாக இருக்கும் பொழுது ஒருவர் பணக்காரராக முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் போகி பாண்டியை முதன்மையானதாக கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here