விநாயகர் சதுர்த்தி அன்று கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிடப்போவதாகவும், உள்ளூர் மக்களுக்காக ஒரு நாணயமும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்காக ஒரு நாணயமும் என இரண்டு வகை நாணயங்கள் வெளியிடப் போவதாகவும் சமீபத்தில் நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’தான் கைலாஷா நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் என்று கூறப்படுவதை விரும்பவில்லை என்றும் தான் ’கடவுள்’ என்றும், தான் மட்டுமின்றி மக்கள் அனைவருமே கடவுள் என்றும் அனைவரையும் கடவுளாக்க பாடுபட்டு கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
நித்யானந்தாவின் இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதை காமெடியாகவே நெட்டிசன்கள் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைலாஷா நாட்டின் நாணயத்தை உண்மையாகவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நித்தியானந்தம்.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா ஒரு நாட்டின் அதிபர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டதோடு, அந்நாட்டின் நாணயத்தையும் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இல்லாத ஒரு நாட்டுக்கு நாணயத்தை வெளியிட்டுள்ள நித்தியானந்தாவின் காமடி உச்சகட்டத்தை அரங்கேறியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.