வலிமை பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here