மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடக்கம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்டவை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முயற்சில் நல்ல பலன் கிடைப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனாகா கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்நிறுவனம் ஏஇஎட்டி 7442 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்க உள்ளது. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் ஏஇஎட்டி 7442 கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த பரிசோதனையில் தடுப்பூசி கொரோனா வைரசை கடுப்படுத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு கட்ட பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை தயாரிக்க இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்திற்கு அமெரிக்கா பல கோடிகள் நிதியுதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here