கணவனை கொன்றுவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொடூர மனைவி

ஒருமுறை திருமணம் செய்து, விவாகரத்தாகிய நிலையில், மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். ஆனால், ஒரு நாள் Deborah Doonanco (58) என்ற அந்த பெண், தன் கணவர் Kevin Felandஐ சுட்டுக்கொன்று, அவர் இருந்த அறையையே தீவைத்து கொளுத்திவிட்டார். Kevin உடல் அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தீயில் கருகிப்போயிற்று. Deborah கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் Deborah.

மேல் முறையீட்டு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. புதிதாக துவக்கப்பட்ட விசாரணையில், மீண்டும் Kevinஉடன் சேர்ந்து வாழ முடிவு செய்தபோது, கொஞ்ச நாட்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் சீக்கிரமே Kevin போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் தெரிவித்தார் Deborah.
ஒரு நாள் குடிபோதையில் வீட்டுக்கு வந்த Kevin, வாக்குவாதத்தின்போது துப்பாக்கியை எடுத்து நீட்டி தன்னை மிரட்டியதாக தெரிவிக்கும் Deborah, எப்படியும் கணவர் தன்னை கொன்றுவிடுவார் என்று பயந்து வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக்கொன்றுவிட்டு, அவர் இருந்த அறையை தீவைத்துக் கொளுத்திவிட்டதாக தெரிவித்தார்.

Deborah ஒரு நல்ல ஆசிரியையாக இருந்தார், அவரை Kevin அடித்து உதைத்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதால், இன்று அவர் ஒரு குற்றவாளியாக நிற்கிறார் என அவர் வாழ்ந்த கிராமத்து மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் Kevin குடும்பத்தினர், அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளிடமிருந்து அவளது தந்தையை பிரிக்க Deborahவுக்கு உரிமையில்லை என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் Deborahவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட, உடனடியாக சிறையிலடைக்கப்பட்டார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here