கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்

பொது வெளியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது பேரழிவுக்கான செயல்முறை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதனாம் கூறுகையில், “நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தீவிரமாக இருப்பதற்கு பதிலாக கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நாடுகள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் 4 முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நிகழ்வுகளை அதிகரித்தல் என்பது வைரஸ் வளருவதற்கான வழியாகும்.

எனவே ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தனித்தனியாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தொடர்புள்ளவர்களை கண்டறியும்போது நோயை கண்டறிதல், தனிமைப்படுத்தல், சோதனை செய்தல் மற்றும் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய கணக்கெடுப்பு ஒன்றில் 90 சதவீத நாடுகள் சுகாதார சேவைகளில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. தற்போதுள்ள கொரோனா நோய் தொற்று போன்ற சுகாதார அவசர நிலைகளை எதிர்கொள்வதற்காக சிறப்பாக தயாராக வேண்டியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here