வேட்பாளர்களை முன்மொழிவதில் நேர்மை

வரவிருக்கும் சபா தேர்தலுக்கு கட்சியின் வேட்பாளர்களை பரிந்துரைப்பதற்கான ஒருமைப்பாடு முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  தெரிவித்தார்.

அவர்கள் எந்த இனக்குழு அல்லது இடத்திலிருந்து வந்தவர்கள் என்பதல்ல, ஆனால் அவர்கள் ஒருமைப்பாடு கொண்டவர்களா என்பதுதான்  முக்கியம் என்று  அவர் இங்குள்ள சபா அனைதுலக மாநாட்டு மையத்தில், சபா பி.கே.ஆர் தேர்தல் தேர்தல் இயந்திரங்களைத் தொடங்கும்போது கூறினார்.

சபா பி.கே.ஆருக்கு அதன் வேட்பாளர்களைத் தீர்மானிக்க அதிக சுதந்திரம் வழங்க கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டதாக அன்வார் கூறினார்.

பி.கே.ஆர் வேட்பாளர்கள் தங்கள் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை வென்றெடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பி.கே.ஆர் ஆலோசனைக் குழுவின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில்,  சபா பி.கே.ஆர் தலைவர் டத்தோ கிறிஸ்டினா லீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணையம் செப்டம்பர் 12ஆம் தேதி வேட்புமனுக்களுக்கும் செப்டம்பர் 26 ஐ வாக்குப்பதிவு நாளாகவும் நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here