அண்டை நாடான சீனா, ஹாங்காங்கை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, ஹாங்காங் நிர்வாக அதிகாரி, கேரி லாம், நேற்று நடக்க இருந்த பொதுத் தேர்தலை, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கும், அரசுக்கு எதிராகவும், நேற்று போராட்டம் நடந்தது. நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தின்போது, 90 பேரை, போலீசார் கைது செய்தனர்.