கோவிட் இன்னும் அகலவில்லை

மூன்று இலக்கங்களாக கோவிட் -19  அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரதமர்

டான்ஸ்ரீ முஹிடீன் யாசின்  விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு நினைவுப்படுத்தினார்.

வழக்குகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த அவர், கோவிட் -19 தொற்றுநோயின் அபாயங்கள், ஆபத்துகள் இன்னும் உள்ளன, அது இன்னும்  அகலவில்லை என்றார்.

மருத்துவ வல்லுநர்கள் ,  உலக சுகாதார அமைப்பு (WHO) கருத்துப்படி, ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத வரை மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமலேயே இருக்கும் என்றார்.

உறுதியான , உடனடி நடவடிக்கை இருக்க வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அதற்கான அணுகலில் உறுதியான கவனம்  இருக்க  வேண்டும்.

இந்த முக்கியமான பிரச்சினையை (தடுப்பூசி) கையாள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக உற்பத்தி செய்யும் நாடுகளுடனான ஒத்துழைக்கும் என்று அவர் இங்கு பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின்  நான்காம் ஆண்டு விழாவில் உரையாற்றியபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here