இருக்கை ஒதுக்கீடு நாளை அறிவிக்கப்படும்

சபா மாநிலத் தேர்தலுக்கான யு.எம்.என்.ஓ, பெர்சத்து இடையே இருக்கை ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்கப்பட்டு நாளை அறிவிக்கப்படும்.

பாரிசன் நேஷனல் (பி.என்) பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்வார் மூசா கூறுகையில், யு.எம்.என்.ஓ,  பெர்சத்து ஆகிய  இரு தரப்பினரும் போட்டியிடும் இடங்களை மிகவும் இணக்கமான பேச்சுவார்த்தை, செயல்முறை மூலம் ஒதுக்குவது குறித்து ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர்.

இங்குள்ள சூராவ் அன்-நஜாவில் நடந்த புபர் அசுரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சினை 100 சதவீதம் தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு ,  போட்டியிடும் வேட்பாளர்களை சபா பிஎன் தலைவர் டத்தோ ஶ்ரீ  பங்ளிமா மொக்தார் ராடின் நாளைசந்திப்பார்.

இந்த மாநிலத் தேர்தலில் மொத்தம் 73 இடங்கள் போட்டிப்பட்டியலைல் இருக்கின்றன. தேர்தல் ஆணையம் வேட்புமனுக்காக செப்டம்பர் 12  ஆம் நாளாக அறிவித்திருக்கிறது. முன்கூட்டியே வாக்களிக்க செப்டம்பர் 22, வாக்குப்பதிவுக்கு செப்டம்பர் 26 ஆகியவற்றை நிர்ணயித்துள்ளது.

யு.எம்.என்.ஓ ,  பெர்சத்து ஆகிய இரண்டும் மக்கள் தொகையில் பெரும்பான்மையான முஸ்லீம் பூமிபுத்ராக்கள் இருக்கும் 45 இடங்களில் கவனம் செலுத்துவார்கள் என்றும், மீதமுள்ள 28 இடங்கள் பெரிக்காத்தான் நேஷனல் (பி.என்) இன் கீழ் மற்ற கட்சிகளால் போட்டியிடும் என்றும் அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here