5 மொழியில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதி படம்

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விஜய்சேதுபதி தென்னிந்திய நடிகராக இருந்து தற்போது அகில இந்திய ஸ்டாராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் கான் உடன் பெரிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் ஐந்து மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதி நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here