போலி ஆவணங்களுடன் ஹைதராபாத்தில் மருத்துவர்கள் கைது

போலி ஆவணங்களுடன் ஹைதராபாத்தில் மருத்துவர்கள் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள போடுப்பால் மேற்கு பாலாஜி ஹில்ஸில் வசிக்கும் போலி மருத்துவர் ஒய்.எஸ் தேஜா, அவரது கூட்டாளிகளான போகுடி சீனிவாஸ், வீரகாந்தம் வெங்கடராவ் ஆகியோர் போலி ஆவணங்களுடன் சிகிச்சை அளிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலி மருத்துவர் ஒய்.எஸ்.தேஜா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரிடமிருந்து தற்காலிக சான்றிதழ்கள், 10 வது பட்டமளிப்பு சான்றிதழ்கள், இடைநிலை, எம்பிபிஎஸ், பிபிஏ மற்றும் எம்பிஏ ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஆவணக்கள் அனைத்தும் போலியானவை என தெரிவித்துள்ள போலீசார், இந்த மருத்துவர்கள் வசம் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here