பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கை – பலர் கைது

கூச்சாய் வர்த்தக வளாகத்தில் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் அப்பகுதியில் இயங்கி வந்த கேளிக்கை மையத்தின் மேலாளர் 44 வயதுடைய சீன பெண்மணி, வங்காளதேச ஆடவர் மற்றும் வியட்நாட் நாட்டை சேர்ந்த 5 ஆடவர்களையும், 13 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 18 வயது முதல் 41 வயதுடையோர் ஆவர்.

மேலும் அந்த கேளிக்கை மையத்தில் உள்நாட்டைச் சேர்ந்த  20 வயது முதல் 50 வயதிலான 20 ஆண்களையும் 9 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். உள்நாட்டு சேர்ந்த அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட வேளையில் முறையான ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டவர்களை குடிநுழைவு துறை இலாகாவிடம் ஒப்படைக்கப்படுவர் என்று  பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைருல் நிஜாம் முகமட் ஜைனுடின் கூறுகையில் கேளிக்கை மையங்களை நடத்துபவர்கள் கண்டிப்பாக முறையான வேலை பெர்மிட் வைத்திருப்பவர்களை பணிக்கு அமர்த்துமாறு அறிவுறுத்தியதோடு அனைவரும் கண்டிப்பாக எஸ்ஓபியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here