பெடரல் நெடுஞ்சாலையில் இருந்து பழைய கிள்ளான் சாலையை நோக்கி பயணித்திருந்த கார் மதியம் 1.00 மணியளவில் தீ பிடித்து கொண்டதாக தகவல் கிடைத்தவுடன் செப்பூத்தே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 9 பேர் 8 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போது மைவி ரக கார் 90 விழுக்காடு தீக்கிரையாகி இருந்தது.
சம்பந்தப்பட்ட கார் தீ பிடிப்பதற்கு முன் விபத்தில் சிக்கி சாலை தடுப்பில் மோதியதால் தீ பிடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட காரை ஓட்டி வந்த பெண்மணி கையில் லேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.