59 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விடப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனின் தலை முடி

ஆப்ரஹாம் லிங்கனின் தலைமுடி, ரூ. 59 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக அமைந்துள்ளது.

ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி மற்றும் அவரது 1865 படுகொலை பற்றிய இரத்தக் கறை படிந்த தந்தி ஏலத்தில், 81 ஆயிரம் டாலருக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. போஸ்டனின் ஆர்.ஆர் ஏலத்தின்படி, சனிக்கிழமைடன் நடந்த ஏலத்தில் இந்த பொருட்கள் விற்கப்பட்டன. ஆப்ரஹாம் லிங்கனின் தலைமுடியை ஏலத்தில் வாங்கியவர் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

லிங்கனின் பிரேத பரிசோதனை பரிசோதனையின் போது சுமார் 2 அங்குல (5 சென்டிமீட்டர்) நீளமுள்ள முடியை சேகரித்து வைத்தார் ஜான் வில்கேஸ் பூத் என்பவர். அந்த காலத்தில், தபால் அலுவலகத்தில் டாக்டர் டாட் அனுப்பிய அதிகாரப்பூர்வ போர் துறை தந்தியில் இந்த முடி பொருத்தப்பட்டுள்ளது.

“நீங்கள் லிங்கனின் தலைமுடியின் மாதிரிகளைக் கையாளும் போது, ​​ஆதாரம் மிகவும் முக்கியம். இந்த விஷயத்தில், இது ஜனாதிபதியின் படுக்கையில் இருந்த ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து வந்தது என்பதை நாங்கள் அறிவோம்” என்று ஆர்.ஆர் ஏலத்தின் நிர்வாக துணைத் தலைவர் பாபி லிவிங்ஸ்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 16வது அதிபராக இருந்தவர் ஆப்ரகாம் லிங்கன். அவர், அடிமைத்தனத்தை அழிக்க உழைத்தவர் என்பதும் ஜனநாயகம் குறித்த தனது பார்வை குறித்தும் தான் ஆற்றிய உரை மூலம் தெளிவாக எடுத்துரைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here