மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் தற்போதைக்கு இந்த கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இதனால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
இந்நிலையில், கமல் – லோகேஷ் இணையும் படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.