செராஸ் வட்டார தொடர் வீடுகளில் ஏற்பட்ட தீயில் 4 வீடுகள் அழிந்தன

செராஸ் ஜாலான் ஈக்கான் எமாஸ் என்ற பகுதியில் அமைந்திருக்கும் தொடர் வீடுகளில் தீ பிடித்திருப்பதாக செராஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு இன்று அதிகாலை 3.59 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

தகவல் அறிந்தவுடன் பண்டார் துன் ரசாக், புடு, ஜாலான் ஹங் துவா ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்டுப் படையை சேர்ந்த 51 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து 20 நிமிடத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனால் தீ வேகமாக பரவி அத்தொடர் வீடுகளில் இருந்த 4 வீடுகள் முற்றாக அழிந்தது. மேலும் ஒரு கார் 15 விழுக்காடும், ஒரு மோட்டார் 50 விழுக்காடும் தீயில் அழிந்தது என்று மூத்த செயல்முறை அதிகாரி (கமாண்டர்)  Rodzlan Bin Othman தெரிவித்தார்.

தீ விபத்தில் ஊயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்தில் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

படங்கள் :எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here