பினாங்கின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

ஜார்ஜ் டவுன் : பினாங்கில் சுமார் 10,000 பேர்  செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  நீர் வழங்கல் தடையை சந்திக்க நேரிடும்.பினாங்கு நீர் வழங்கல் கழகத்தின் (பிபிஏபிபி) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஜாசெனி மைடின்சா  கூறுகையில் 1087 ஜாலான் கம்போங் படாக், சுங்கை அராவில் மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக குழாய்களை மாற்றுவதை உள்ளடக்கும் என்று கூறினார்.

“பணியை எளிதாக்குவதற்கு ஜாலான் டத்தோ ‘இஸ்மாயில் ஹாஷிம் சந்திப்பிலிருந்து புசாட்  பெட்டானி ரிலாவ், ஜாலான் பயா டெருபோங் வரை இருக்கும் நீர் குழாய்களின் செயல்பாட்டை பிபிஏபிபி பிரித்து நிறுத்த வேண்டும் என்று அவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கம்போங் ரெலாவ், தாமான் ஸ்ரீ சாரி , பெர்சியாரன் பயா தெருபோங் (1,2, 3,4 மற்றும் 5), பெர்சியாரன் பயா தெருபோங் (1,2, 3,4 மற்றும் 5), தாமான் பெண்டேரா , சோலோக் ரிலாவ் (1,2 மற்றும் 3), லெபு ரிலாவ் (1,2, 3,4, 5,6, 7,8, 9 மற்றும் 10),  திங்காட் ரெலாவ் (2,4, 6,8 மற்றும் 10), தோட்டம் அலோர் விஸ்டா மற்றும் தாமான் டேசா ரெலாவ் ஆகிய இந்த பகுதிகளில் உள்ள மக்கள்  போதுமான நீரை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் பிபிஏபிபி அறிவுறுத்தியது. – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here