எஜமானை காப்பாற்றி உயிரை விட்ட குதிரை

தெற்கு டெல்லியில் மின்சாரம் தாக்கி ஒரு குதிரை பலியானது. தெற்கு டெல்லி ஹசரத் நிஜாமுதீன் பாஸ்தி பகுதியில் உள்ள ஆல்வி சவுக் என்ற இடத்தில் நேற்று பகல் 11 மணி அளவில் ஒரு குதிரையுடன், அதன் உரிமையாளர் வந்துகொண்டு இருந்தார். அவர்கள் துர்க்மேன் கேட் பகுதியில் இருந்து குதிரைக்கு தேவையான உணவை வாங்க வந்தனர். அப்போது ஆல்வி சவுக் பகுதியில் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. பூமிக்கு அடியில் பதித்து இருந்த மின்சார கேபிள் மூலம் மின்சாரம் அந்த கழிவு நீரில் பாய்ந்தது. இதை அறிந்த குதிரை உடனடியாக தனது உரிமையாளரை மிதித்து தள்ளி விட்டு அவரைக்காப்பாற்றியது.

ஆனால் தடுமாறி குதிரை மின்சாரம் பாய்ந்த கழிவுநீரில் விழுந்து இறந்தது.இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியை சேர்ந்த கமல்ஹாசன் என்பவர் கூறுகையில்,’ கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடியதால்தான் இந்த சம்பவம் நடந்தது’ என்றார். மேற்கு நிஜாமுதீன் குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஷேக் முகமது உமர் இதுபற்றி கூறுகையில்,’ கழிவுநீர் அடிக்கடி சாலையில் வெளியேறுவது குறித்து பலமுறை புகார் அளித்துவிட்டோம். இந்த சூழலில் மின்சார வயர்கள் வெளியே நீட்டியது அபாயத்தை ஏற்படுத்தி விட்டது.

ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் தற்போது நடந்து விட்டது. கழிவு தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததை குதிரை உணர்ந்ததால் அதன் உரிமையாளரை மிதித்து தள்ளி காப்பாற்றியது. ஆனால் பாவம் அந்த குதிரை இறந்து விட்டது. இந்த சம்பவத்தில் இன்னொரு நாய் கூட காயம் அடைந்துள்ளது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here