பேடிஎம் மீண்டும் சேர்ப்பா?

பெட்ரோல் பங்க், கடைகள் உட்பட பல இடங்களில் மொபைல் மூலமான பண பரிவர்த்தனைகளில் பேடிஎம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேடிஎம் மற்றும் பேடிஎம் பர்ஸ்ட் கேம் ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் நேற்று நீக்கப்பட்டன.

ஆன்லைன் சூதாட்டங்கள், விளையாட்டு பெட்டிங்கிற்கு வழி வகுக்கும் முறைப்படுத்தப்படாத சூது ஆப்ஸ்களையும், சூது இணையதளங்களுக்கு பணம் செலுத்த வழி வகுக்கும் ஆப்ஸ்களுக்கும் பிளே ஸ்டோரில் அனுமதி அளிப்பதில்லை என  கூகுள் நிறுவனம் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ளது. எனவே, இந்த காரணத்துக்காகவே பேடிஎம் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், பேடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் பணம் என்னவாகுமோ என பீதியடைந்தனர்.

இதை தொடர்ந்து பேடிஎம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘வாடிக்கையாளர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. வழக்கம்போல பயனாளர்கள் அதை பயன்படுத்த முடியும். இந்த ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் இது மீண்டும் இடம்பெறும்’’ என உறுதி அளித்தது. அதற்கேற்ப ஒரே நாளில் நேற்று மீண்டும் கூகுள் ஸ்டோரில் சேர்க்கப்பட்டு விட்டதாக பேடிஎம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. ஆனால், பேடிஎம் பர்ஸ்ட் கேம் ஆப்ஸ் சேர்க்கப் படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here