வைரலாகுது அஜித் பற்றிய லக்ஷ்மி மேனனின் ஸ்டேட்டஸ்

கும்கி படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதற்கு பின்னர் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம் பிடித்தார்.

குடும்பபாங்கான கதாபாத்திரத்தை தேடித்தேடி நடித்தவர் லட்சுமி மேனன். ஆனால் அவர் போறாத காலம் தீடீரென 2016ல் விஜய் சேதுபதியுடன் ரெக்க படத்திற்குப் பின் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லை.விஷாலுடன் காதல், பள்ளி படிப்பை தொடர சென்றுவிட்டார் என சொல்லப்பட்ட்டது.

எனினும் நடனப்பயிற்சி, உடம்பை ஸ்லிம் ஆக மாற்றி சமீபத்தில் போட்டோக்கள் வெளியிட்டார். மீண்டும் நடிக்க வருகிறார்.

இந்நிலையில் வேதாளம் படத்தின் அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘தல அஜித்துடன் இணைந்து நடித்தது என் கனவு. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் சிவாவுக்கு நன்றி. அஜித் சிறந்த ஜென்டில் மேன். pro ப்ரியாவுக்கு நன்றி அந்த நாட்களுக்காக. எனது பாவரிட் படம் வேதாளம்.’

அஜித் ரசிகர்கள் நேற்று முழுவதும் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு எதிராக ட்விட்டரில் ஹாஸ் டாக் இட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அஜித் பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்டு அவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார் லக்ஷ்மி மேனன்.

நடிகைகள் போட்டோ பதிவிடுவது போன்று இதுவும் ஒரு வித மார்க்கெட்டிங் தான் பாஸ். விரைவில் லக்ஷ்மி மேனன் 2.0 வை திரையில் பார்ப்பீர்கள் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here