உயிர் போனாலும் அவங்க செஞ்சதை வாங்கமாட்டோம்

வடகொரியவில் மழை வெள்ளம், கொரோனா, நீதி நெருக்கடி என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
அங்கு மக்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை, மருத்துவக் கட்டமைப்புக்கள் குறைவாக இருக்கிறது என்றும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் வடகொரியாவில் வாழ்ந்து நியூயார்க்கிற்குத் தப்பிச்சென்ற பெண்மணி ஒருவர் தனது 13 ஆவது வயதுவரை பூச்சிகளை உண்டு வாழ்ந்ததாக பொதுவெளியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா தாக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க வடகொரியா தற்போது தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்த முகக்கவசங்களை திருப்பி அனுப்பி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஏனென்றால் அவை அனைத்தும் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக அத்யாவசியத் தேவையான முகக்கவசங்களைக் கூட திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில் அதிபர் கிம் இன் நிர்வாகம் இப்படி செய்வதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here