நண்பனை கரம்பிடித்த சின்னத்திரை நடிகை..!

சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தனலட்சுமி. இவர் பத்து வருடங்களாக தனது நண்பனை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பூவே பூச்சூடவா” என்கிற தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த தொடர் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த தொடரில் அனு என்கிற கதாபாத்திரத்தில் தனலட்சுமி நடித்துக்கொண்டிருக்கிறார். இவரை தனலட்சுமி என்று அழைப்பதைவிட அனு என்று தான் அழைத்து கொண்டிருக்கின்றனர்.

அனு என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. இவர் பத்து வருடங்களாக அவரது உயிர் நண்பரை காதலித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அன்று இவரது நண்பரையே கரம் பிடித்து கொண்டார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோர்கள்,சொந்தக்காரர்கள், நண்பர்கள் என எல்லோர் முன்னிலையில் இவர்களது திருமணம் நிறைவு பெற்றது.

இவர்கள் திருமணத்தன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது. தற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் புதிய காரை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார் அந்தப் புகைப்படத்திற்கு கீழே புதிய வருகை என கேப்ஷன் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here