6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மஹால், மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், சுற்றுலா பயணியருக்காக, தாஜ்மஹால் இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹாலுக்குள் செல்ல, ஒரு நாளுக்கு, 5,000 சுற்றுலா பயணியருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா கோட்டையும் இன்று திறக்கப்படுகிறது. இங்கு, ஒரு நாளுக்கு, 2,500 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள், சுற்றுலா பயணியருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

உரிமம் பெற்ற வழிகாட்டிகளுக்கு மட்டுமே, உள்ளே நுழைய அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தாஜ்மஹால், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை, ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here