கோத்த கினபாலு: “துன் டாக்டர் மகாதீர் முகமது எங்கே?” என்று சபா எம்சிஏ பொருளாளர் டத்தோ சின் கிம் ஹியுங் கேட்கிறார்.
16 ஆவது மாநிலத் தேர்தல்களுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ஏன் தங்கள் பிரச்சாரங்களில் வாரீசன் பிளஸ் கூட்டணியை ஆதரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“மாநிலத் தேர்தல் நடைபெற்ற இன்னும் 4 நாட்களே உள்ளது. டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம், லிம் கிட் சியாங், லிம் குவான் எங் மற்றும் டாக்டர் மகாதீரை தவிர பல வேட்பாளர்கள் தங்கள் கட்சிகாக பிரசாரம் செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம் என்று சின் கூறினார்.
“டாக்டர் மகாதீர் வாரிசன் மற்றும் அவர்களின் கூட்டணி பங்காளிகளின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து பிரச்சாத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் வித்தியாசமாக அவர் அவர்களின் பிரச்சார பாதைகளில் இருந்து ஏன் விலகி இருக்கிறார் என்று அவர் கேட்டார்.
வாரிசன் தலைவர் டத்தோ ஶ்ரீ ஷாபி அப்டாலை பிரதமராக தேர்வு செய்த ஒருவரை அவர்கள் மறந்துவிட்டார்களா என்று அவர் கேட்டார். அல்லது, டாக்டர் மகாதீரின் உரை அவர்களின் பிரச்சாரத்திற்கு ஒரு பின்னடைவாக அவர்கள் பார்க்கிறார்கள் ஏனெனில் சபாஹான்கள் அவரை விரும்பவில்லை?” சின் கூறினார்.
நான்காவது பிரதமராக இருந்த 22 ஆண்டுகளிலும், 22 மாதங்கள் ஏழாவது பிரதமராக இருந்தபோதும், சபாவிடம் அவர் “தவறாக நடந்து கொண்டார்” என்ற குற்றத்தின் காரணமாக டாக்டர் மகாதீர் இல்லாதிருப்பாரா என்று அவர் ஆச்சரியப்பட்டார்.
“வாரிசன் பிளஸின் பிரச்சாரங்களில் அவர் உதவ வரவில்லை என்பதற்கான காரணங்கள் இவையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.