குடிப்போதையில் கார் ஓட்டுபவர்களுக்கு வந்துள்ளது புதிய சட்டம்

பெட்டாலிங் ஜெயா: மக்களவையில் சாலை போக்குவரத்து (திருத்த) மசோதா 2020 நிறைவேற்றப்பட்டதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று (செப்டம்பர் 22) மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மலேசியாவில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதையும், போதைப் பொருள் பயனபடுத்தி  வாகனம் ஓட்டுவதையும் சிறப்பாகச் சமாளிப்பதற்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

திருத்தங்களின் முக்கியத்துவத்தை  உணர்த்த அண்மையில் ஒரு  ஐந்தாம் படிவ மாணவர் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரால் கொல்லப்பட்ட வழக்கை அவர் மேற்கோள் காட்டினார்.

“இன்று அதிகாலை நடந்த மற்றொரு வழக்கு, நாங்கள் உண்மையிலேயே சீற்றம் அடைகிறோம். இதனால்தான் போக்குவரத்து அமைச்சகம் சாலை போக்குவரத்துச் சட்டத்தில் 1987 இல் திருத்தங்களைச் செய்துள்ளது. இன்று மக்களவையின் மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு திருத்தங்களை நிறைவேற்றியுள்ளதாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) முகநூல் பதிவில்  கூறினார்

இந்த மசோதா ஆகஸ்ட் 26 அன்று  மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக டாக்டர் வீ மேலும் கூறினார். இது எனக்கும் போக்குவரத்து அமைச்சில் பணிபுரிபவர்களுக்கும் திருப்தி அளிக்கும் விஷயம்.

“சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 ஐ வலுப்படுத்துவதற்கான எங்கள் கூட்டு விருப்பத்தை நாங்கள் நெருங்கி வருகிறோம். குறிப்பாக குடிப்போதை மற்றும் போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல ஆகியவை அவர் கூறினார்.

மசோதாவின் திருத்தங்களின் கீழ், ஆபத்தான அல்லது பொறுப்பற்ற வாகனம் ஓட்டுவதால் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அபாயகரமான அல்லது பொறுப்பற்ற வாகனம் ஓட்டியதற்காக பிரிவு 41இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 20,000 வெள்ளிக்கு குறையாத அபராதமும் 50,000 வெள்ளிக்கு மிகாமலும் இருக்கக்கூடும் என்று மசோதா முன்மொழிந்தது.

இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றச்சாட்டு வழக்கில், ஒரு நபர் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் 100,000 வெள்ளி அபராதத்திற்கு மேல் இருக்கும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும். இதற்கு முன்னர், குற்றத்தின் குற்றவாளிகள் இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி முதல் 20,000  வெள்ளி வரை அபராதமும் விதிக்க வேண்டும் என்று சட்டத்தின் 41ஆவது பிரிவு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here