திடீரென பலியான 330 யானைகளால் அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் வன ஆர்வலர்களை அச்சமடைய செய்துள்ளது.

நீரில் உள்ள சயனோபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுகள் 300 க்கும் மேற்பட்ட யானைகளை கொன்றன என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர், இது மரணங்கள் தொடர்பான விசாரணையின் முடிவை அறிவித்தது.

நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இந்த சயனோபாக்டீரியாக்கள் அனைத்தும் நஞ்சுகளை உற்பத்தி செய்வதில்லை.ஆனால் காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரித்து வருவதால் நஞ்சுகள் உருவாவது அடிக்கடி நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, நச்சு உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“மே மாத தொடக்கத்தில் முதன்முதலில் பதிவாகத் தொடங்கிய யானைகளின் இறப்புகள் ஜூலை மாதம் 330 ஆக உயர்ந்துள்ளது. எனினும் போட்ஸ்வானாவின் வனவிலங்குகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here